உக்ரைன் தலைநகரில் ரஷியா தாக்குதல் - 9 பேர் உயிரிழப்பு

6 குழந்தைகள் உள்பட 63-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷியா ஆக்கிரமிப்பு கிரிமியா உள்ளிட்ட பகுதிகளை உக்ரைன் விட்டுக் கொடுக்க அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது.
உக்ரைன் தலைநகரில் ரஷியா தாக்குதல் - 9 பேர் உயிரிழப்பு
Published on

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இன்று அதிகாலை 1 மணியளவில் கீவ் நகரில் உள்ள 4-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளின் மீது ரஷியா ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 6 குழந்தைகள் உள்பட 63-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உக்ரைன் ராணுவம் கூறியதாவது, ரஷியா நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டடங்கள் தகர்க்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த 42-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்களில் தீ பற்றி எரிந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

முன்னதாக, அமெரிக்கா தலைமையிலான ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தத்திற்காக லண்டனில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகக் கூறப்பட்ட சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதலானது நடந்துள்ளது. ரஷியா ஆக்கிரமிப்பு கிரிமியா உள்ளிட்ட பகுதிகளை உக்ரைன் விட்டுக் கொடுக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com