புதிய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல்: ரஷியா தகவல்

ஒரேஷ்னிக் அணுஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை பெற்றது.கடந்த வாரம் ராணுவத்தில் இணைக்கப்பட்டு செயல்பட தொடங்கியது என ரஷியா அறிவித்திருந்தது.
புதிய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல்: ரஷியா தகவல்
Published on

ரஷியா- உக்ரைன் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், புதிய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை (அணுஆயுதம் தாங்கிச் செல்லும் திறன்கொண்டது) மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளார்.

ஒரேஷ்னிக் ஏவுகணையுடன் நூற்றுக்கணக்கான டிரோன்கள், 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலமும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 23-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் கீவ் நகரில் உள்ள கத்தார் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன்- ரஷியா இடையில் சிறைக்கைதிகள் பரிமாற்றம் செய்வதற்கு கத்தார் முக்கிய பங்காற்றியது.

கடந்த ஆண்டு இறுதியில் ஒரேஷ்னிக் ஏவுகணையை உக்ரைன் பகுதியில் செலுத்தில் பரிசோதித்தது. கடந்த வாரம் செயல்பாட்டுக்கு வந்ததாக தெரிவித்தது. இந்த நிலையில் தாக்குதல் நடத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com