ரூ.14 ஆயிரம் கோடி மோசடி.. வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது - நாடுகடத்த இந்தியா தீவிரம்

மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர்மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி ஜாமீன் பெறுவதற்கான நடவடிக்கைகளை சோக்சி மேற்கொண்டுள்ளார்.
ரூ.14 ஆயிரம் கோடி மோசடி.. வைர வியாபாரி மெகுல் சோக்சி பெல்ஜியத்தில் கைது - நாடுகடத்த இந்தியா தீவிரம்
Published on

இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரிகளான நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே கரீபியன் நாடான ஆண்டிகுவாவில் இருந்த மெகுல் சோக்சி, 2021ம் ஆண்டு டொமினிகா நாட்டிற்கு தப்பிச் சென்றார்.

அங்கிருந்து ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கடைசியாக மெகுல் சோக்சி தஞ்சம் அடைந்தார். மெகுல் சோக்சியின் மனைவி பிரீத்தி, பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர் என்பதால் அதன்மூலம் மெகுல் சோக்சியும் பெல்ஜியத்தின் தற்காலிக குடியுரிமையை பெற்றார்.

மெகுல் சோக்சி எதிராக இரண்டு பிடிவாரண்ட்டுளை மும்பை நீதிமன்றம் கடந்த 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிறப்பித்தது.

இந்நிலையில் புற்று நோய் சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து மருத்துவமனைக்கு மெகுல் சோக்சி செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், அவரை பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சோக்சி, பெல்ஜியம் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி ஜாமீன் பெறுவதற்கான நடவடிக்கைகளை சோக்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உடனடியாக அவரை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான பணியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com