ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.மீனவர்களின் படகுகளையும் சிறைபிடித்தனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
Published on

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி உள்ளன. ஒவ்வொரு முறையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை செய்வதோடு அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.

அந்த வகையில், மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை 11 மீனவர்கள் கைது செய்தது. மேலும், மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தது.

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மட்டுமின்றி தமிழக மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com