ஐஸ்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு

ஐஸ்லாந்து ரெய்க்ஜேன்ஸ் ரிட்ஜ் கடல் பகுதியில் நேற்று இரவு 7.39 மணியளவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
ஐஸ்லாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு
Published on

ஐஸ்லாந்தில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐஸ்லாந்து ரெய்க்ஜேன்ஸ் ரிட்ஜ் கடல் பகுதியில் நேற்று இரவு 7.39 மணியளவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 52.85 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 32.05 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com