போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவர்கள் கொடுத்த புது அப்டேட்

அவருக்கு வழங்கப்பட்டு இருந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது. சுவாச செயல்பாடு ஒட்டுமொத்தமாக மேம்பட்டு வருகிறது.
போப் பிரான்சிஸ் உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவர்கள் கொடுத்த புது அப்டேட்
Published on

போப் பிரான்சிஸ் உடல்நிலை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் சீராக இருக்கிறது. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை முன்னேற்றம் கண்டதை அடுத்து, அவருக்கு வழங்கப்பட்டு இருந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சுவாசக் கோளாறு காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களில் இருந்து அவர் மீண்டு வந்ததாகவும், நிமோனியாவில் இருந்து அவர் மீண்டு வருவதால் அவரது சுவாச செயல்பாடு ஒட்டுமொத்தமாக மேம்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

88 வயதான போப் பிரான்சிஸ் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலும் செயற்கை சுவாச உதவியுடன் இருந்த நிலையில், அவருக்கு தொடர்ச்சியான இருமல் இருந்து வந்தது. இதன் காரணமாக அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவானது. எனினும், நேற்று மருத்துவர்கள் வழங்கிய தகவல்களின் படி போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளது. ஆனால் ஒட்டுமொத்த உடல்நிலையை பார்க்கும் போது அவர் இன்னும் அபாய கட்டத்தை முழுமையாக கடந்துவரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com