இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் உயரிய விருதுகளைப் பெற்ற ஒரே தலைவர்... பிரதமர் மோடி சாதனை

2018ல் பாலஸ்தீனத்தின் மிக உயரிய விருதை பிரதமர் மோடி பெற்றுள்ளார் பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராகச் சென்று உரையாற்றினார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் உயரிய விருதுகளைப் பெற்ற ஒரே தலைவர்... பிரதமர் மோடி சாதனை
Published on

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ளார். சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார்.

இதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராகச் சென்று உரையாற்றினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அந்நாட்டு சபாநாயகர் உயரிய விருதை அளித்து கவுரவித்தார்.

இதன்மூலம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்ற ஒரே உலக தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார்.

2018ல் பாலஸ்தீனத்தின் மிக உயரிய விருதான 'GRAND COLLAR OF THE STATE OF PALESTINE விருதை பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com