இந்தியாவுடன் மீண்டும் ஆயுத சண்டைக்கு வாய்ப்பில்லை: பாகிஸ்தான் அமைச்சர்

சண்டை நிறுத்தம் இன்னும் அமலில் உள்ளது. இரண்டு தரப்புகளிலும் இருந்தும் படைகளை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் மீண்டும் ஆயுத சண்டைக்கு வாய்ப்பில்லை: பாகிஸ்தான் அமைச்சர்
Published on

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. துல்லியமான இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

இதனால் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நான்கு நாட்கள் ஆயுதச் சண்டை நடைபெற்றது. பின்னர் இருநாட்டின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சண்டை நிறுத்தப்பட்டது.

இந்த சண்டை நிறுத்தம் இன்னும் அமலில் உள்ளது. ஆனால் இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்திருந்தது. இந்த முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் கூறியதாவது:-

சண்டை நிறுத்தம் இன்னும் அமலில் உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு தரப்புகளிலும் இருந்தும் படைகளை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, என்னுடைய கருத்தின்படி புதிய சண்டைக்கு வாய்ப்பு இல்லை. எனினும், இந்தியா ஆயுத சண்டையை மீண்டும் தொடங்கினால் நாங்கள் பதிலடி கொடுப்போம்.

நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். ஆனால், அதற்காக விருப்பப்படவில்லை. பயங்கரவாதி, சிந்து நதி நீர் பிரச்சினை உள்ளிட்ட மற்ற பிரச்சினைகள் தொடர்பாக கூட்டு பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் நாடுகிறது. சிந்து நதி நீர் பிரச்சினையை சஸ்பெண்ட் செய்ய முடியாது.

இவ்வாறு இஷாக் தர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com