"ஐ.எஸ்.ஐ.- ரா" அமைப்புகள் இணைந்து செயல்பட்டால் பயங்கரவாதத்தை குறைக்க முடியும்: பிலாவல் பூட்டோ

ஐ.எஸ்.ஐ.- ரா இணைந்து செயல்பட்டால் பயங்கரவாதத்தை குறைக்க முடியும்.இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முக்கிய பங்காற்றியது.
"ஐ.எஸ்.ஐ.- ரா" அமைப்புகள் இணைந்து செயல்பட்டால் பயங்கரவாதத்தை குறைக்க முடியும்: பிலாவல் பூட்டோ
Published on

பாகிஸ்தான்- இந்தியா இடையிலான புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்பு, தெற்காசியாவில் குறிப்பிடத்தகுந்த வகையில் பயங்கரவாதத்தை குறைக்கும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான பிலாவல் பூட்டோ-சர்தாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிலாவல் கூறியதாவது:-

ஐ.எஸ்.ஐ. (பாகிஸ்தான் புலனாய்வு). ரா (RAW- இந்திய புலனாய்வு) பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து பணியாற்ற தயாராக இருந்தால், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் போதுமான அளவு பயங்கரவாதம் குறைவதை நம்மால் பார்க்க முடியும. இதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முக்கிய பங்காற்றியது. இந்த முதல்படியை நான் வரவேற்கிறேன். ஆனால், இது முதல்படி மட்டும்தான்.

200 மில்லியன் மக்களின் நீர் விநியோகத்தை துண்டிப்பதாக மிரட்டுவது ஐ.நா. சாசனத்தை மீறுவதாகும். இந்த அச்சுறுத்தல், பாகிஸ்தானால் போர் நடவடிக்கையாக கருதப்படும்.

இவ்வாறு பிலாவல் பூட்டோ-சர்தாரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com