இந்திய ஊழியர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் உத்தரவு

H-1B விசா பெற ஆண்டுதோறும் ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவுஇந்த புதிய உத்தரவு நாளை (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊழியர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் உத்தரவு
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவு நாளை (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், H1-B விசா வைத்துள்ள இந்தியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் 24 மணிநேரத்திற்குள் அமெரிக்கா திரும்புமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

H1-B விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டதால், வெளிநாட்டு ஊழியர்கள் இப்போதைக்கு அமெரிக்காவை விட்டு செல்ல வேண்டாம் எனவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com