அமெரிக்காவில் ரூ.225 கோடிக்கு ஏலம் போன சிறிய ஓவியம்

மைக்கலேஞ்சலோவின் ஆரம்பகாலப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஓவியத்தை வாங்க நேரில் மட்டுமல்லாமல் தொலைபேசியிலும் இணையத்திலும் ஓவிய ஆர்வலர்கள் திரண்டனர்.
அமெரிக்காவில் ரூ.225 கோடிக்கு ஏலம் போன சிறிய ஓவியம்
Published on

புகழ்பெற்ற கலைஞர் மைக்கலேஞ்சலோவின் ஓர் ஓவியம் 27.2 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது. இது அவரின் படைப்புகளுக்குக் கிடைத்திருக்கும் அதிக தொகை என்கின்றனர்.

இதன் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.225 கோடியாகும். சிவப்புச் சுண்ணாம்பால் வரையப்பட்ட இந்த சிறிய பாத ஓவியம் சுமார் 5 அங்குலமே ஆனது. பாத ஓவியத்தின் குதிகால் தரையில் இருந்து சற்று உயர்ந்து, கீழே ஒரு நிழலின் வெளிப்புறத்தைக் கொண்டுள்ளது. கால்விரல்கள் சற்று சுருங்கியுள்ளன.

மைக்கலேஞ்சலோவின் ஆரம்பகாலப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு அரிய வரைபடத்திற்கு கிடைத்த மிக உயர்ந்த விலை என்கின்றனர். சிஸ்டீன் தேவாலயத்திற்கு மைக்கலேஞ்சலோ தீட்டிய சுமார் 50 படைப்புகளில் அதுவும் ஒன்று. நியூயார்க்கில் இந்த ஓவியத்தை வாங்க நேரில் மட்டுமல்லாமல் தொலைபேசியிலும் இணையத்திலும் ஓவிய ஆர்வலர்கள் திரண்டனர். 45 நிமிட விறுவிறுப்பான ஏலத்திற்குப் பிறகு இந்த ஓவியம் விற்பனை ஆனது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com