மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் மகிந்த ராஜபக்ச. இவருக்கு அளித்த பாதுகாப்புப் படை எண்ணிக்கையை 60 ஆகக் குறைத்தது இலங்கை அரசு.
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
Published on

கொழும்பு:

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் மகிந்த ராஜபக்ச.

மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கையை 350-ல் இருந்து 60 ஆகக் குறைத்து இலங்கை அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

இதை எதிர்த்து, தனக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை குறைக்கக் கூடாது என வலியுறுத்தி நீதிமன்றத்தில் மகிந்த ராஜபக்ச மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை மார்ச் 19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com