தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்... லெபனான் நாடாளுமன்ற பதவிக்காலம் நீட்டிப்பு!

கடந்த தேர்தல் 2022-ல் நடைபெற்றது.ஹெல்பொல்லா அமைப்பு இந்த முடிவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்... லெபனான் நாடாளுமன்ற பதவிக்காலம் நீட்டிப்பு!
Published on

ஈரான்மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல், லெபனான்மீதான இஸ்ரேல் தாக்குதலை கருத்திற்கொண்டு லெபனான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று லெபனான் நாடாளுமன்றம் கூடி மேற்கொண்ட வாக்கெடுப்பின் மூலம் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 128 இடங்களில், 76 உறுப்பினர்கள் நீட்டிப்பிற்கு ஆதரவாகவும், 41 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். 4 பேர் நடுநிலை வகித்தனர். மேலும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஹெஸ்பொல்லாவின் தொகுதி இந்த நீட்டிப்புக்கு ஆதரவாக வாக்களித்தது.

இந்த முடிவின் மூலம், வருகின்ற மே மாதம் நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. லெபனான் வரலாற்றில் பாதுகாப்பு காரணங்களுக்காக நாடாளுமன்ற பதவிக்காலம் நீட்டிக்கப்படுவது இது முதல் முறையல்ல.  இதற்கு முன்பும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

லெபனானில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும். கடந்த தேர்தல் 2022-ல் நடைபெற்றது. கடந்த திங்கள்கிழமை முதல் லெபனான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. இந்த தாக்குதல்களில் தற்போதுவரை 83 குழந்தைகள் உட்பட 394 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,130 பேர் காயமடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com