இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தாக்குதலுக்கு ISIS பொறுப்பேற்பு

குண்டு வெடிப்பு தாக்கத்தால் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.
இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தாக்குதலுக்கு ISIS பொறுப்பேற்பு
Published on

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கதீஜா துல் குப்ரா மசூதியில் நேற்று மக்கள் அதிகம் கூடியிருந்த சமயம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

சந்தேக நபர் ஒருவர் மசூதி வாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டபோது தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.

குண்டு வெடிப்பு தாக்கத்தால் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதையடுத்து, இஸ்லாமாபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

பாகிஸ்தான் மசூதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 170-க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com