நைஜீரியாவில் துணிகரம்: கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 162 பேர் பலி

நைஜீரியாவில் கொள்ளையர்கள், பயங்கரவாத குழுக்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகின்றன. இங்குள்ள பல பகுதிகள் ஆயுதமேந்திய கும்பல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
நைஜீரியாவில் துணிகரம்: கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 162 பேர் பலி
Published on

குவாரா:

நைஜீரியாவில் கொள்ளையர்கள், பயங்கரவாத குழுக்கள் அடிக்கடி வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன. இங்குள்ள பல பகுதிகள் ஆயுதமேந்திய கும்பல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நைஜீரியாவின் குவாராவில் உள்ள வோரோ உள்ளிட்ட இரு கிராமங்களுக்குள் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நுழைந்தனர். அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்கள் அங்கிருந்த கடைகளையும் மன்னரின் அரண்மனையையும் தீ வைத்துக் கொளுத்தினர்.

இந்தத் தாக்குதலில் 162 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத குழுக்களே காரணம் என மாநில அரசு குற்றம்சாட்டியது.

துப்பாக்கிச் சூடு காயங்களுடன் பலர் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர். இன்னும் பல சடலங்கள் கிடைக்கலாம். பாரம்பரிய மன்னர் எங்கு இருக்கிறாரென தெரியவில்லை என அதிகாரிகள் கூறினர்.

குவாரா மாநில ஆளுநர் அப்துல் ரஹ்மான் அப்துல் ரஸாக் இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மாநிலத்தில் நடந்து வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்ட விரக்தியில் பயங்கரவாத குழுக்கள் இந்தக் கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளன என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com