NATO உறுப்பு நாடான துருக்கி மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஈரான்

அமெரிக்க தூதரகங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. துருக்கி மீது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியது.
NATO உறுப்பு நாடான துருக்கி மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஈரான்
Published on

ஈரான் மீது கடந்த சனிக்கிழமை முதல் அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்சத்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 700க்கும் அதகமானோர் கொல்லப்பட்டனர்.

பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் அமெரிக்க படைத்தளங்கள் சேதங்களை சந்தித்துள்ளன. மேலும் அந்நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீதும் ஈரான் நேற்று முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், NATO உறுப்பு நாடான துருக்கி மீது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஈரானிய ஏவுகணை NATO படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. மேலும், எந்தவொரு விரோத நடவடிக்கைக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று துருக்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com