ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக கூறும் ஈரான்: அமெரிக்கா சொல்வது என்ன?

ஈரான் தாக்குதலில் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் முக்கிய பங்கு வகிக்கிறது.வளைகுடா கடல் பகுதியில் செல்லும் கப்பல்களை ஈரான் குறிவைக்கிறது.
ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக கூறும் ஈரான்: அமெரிக்கா சொல்வது என்ன?
Published on

அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துடன் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. 17 ராணுவ தளங்கள் டார்கெட் செய்யப்பட்டன என்று ஈரான் தெரிவித்துள்ளது.

அத்துடன் வளைகுடா பகுதிகளில் செல்லும் எண்ணெய் கப்பல்களையும் ஈரான் குறிவைத்துள்ளது. இதற்கிடையே வளைகுடா கடல் பகுதியில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆபிரகாம் லிங்கன் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் இருந்து விமானங்கள் பறந்து சென்று ஈரானை தாக்கி வருகிறது. இந்த நிலையில் ஆபிரகாம் லிங்கன் மீது 4 பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்காவின் மத்திய கமாண்ட் (CENTCOM) ஈரானின் கூற்றை மறுத்துள்ளது. ஈரான் பொய் சொல்கிறது. ஈரானின் ஏவுகணை கப்பல் அருகில் கூட வரவில்லை எனத் தெரிவித்துள்ளது.

ஒருவேளை ஈரான் சொல்வது உண்மை என்றால், அமெரிக்காவுக்கு இது மிகப்பெரிய இழப்பாகும். இதற்கிடையே நிலமும் கடலும் பயங்கரவாத ஆக்கிரமிப்பாளர்களின் கல்லறையாக மாறும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com