ஜாவா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நிலச்சரிவு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது.
ஜாவா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு
Published on

ஜகார்த்தா:

இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி 19 பேர் பலியாகி இருந்தனர்.

இந்நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது, பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் இருந்து தப்பித்த 11 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஜாவா மாகாணத்தின் பெக்கலோங்கன் பகுதியில் 9 கிராமங்கள் நாசமாகின. தொடர் மழையால் மலையோர கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்ததால் பல கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com