அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர்: தேடும் பணி தீவிரம்

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா. கலிபோர்னியாவின் பெர்க்லே பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வந்தார்.
அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர்: தேடும் பணி தீவிரம்
Published on

வாஷிங்டன்:

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22). சென்னை ஐஐடியில் இளங்கலை படிப்பை முடித்த இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்க்லே பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஸ்ரீனிவாசய்யாவை காணவில்லை என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பார்க் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு வாசலில் அவரது பாஸ்போர்ட், மடிக்கணினி, அவரது பை உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவர் மாயமானது குறித்து இந்திய துணை தூதரகம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அவரது குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com