இந்தியா-ரஷியா உறவுகள் உலக நலனுக்கு முக்கியமானது: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார்.
இந்தியா-ரஷியா உறவுகள் உலக நலனுக்கு முக்கியமானது: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்
Published on

மாஸ்கோ:

இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு மந்திரி ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதன்பின் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேசுகையில், இந்தியா-ரஷியா உறவுகள் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது. உக்ரைன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான் மோதல் உள்ளிட்டவை குறித்த கருத்துக்களை கூட்டத்தில் பரிமாறிக் கொள்வோம். அமைதியை நிலைநாட்டுவதற்கான ரஷியாவின் சமீபத்திய முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com