ஹமாஸ்-இன் நுக்பா படைப்பிரிவு தளபதி உயிரிழப்பு- இஸ்ரேல் பாதுகாப்பு படை

டிரோன் தாக்குதலில் அப்துல் ஹாதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. நுக்பா படைப்பிரிவு தளபதியான அப்துல் ஹாதி சபா கொல்லப்பட்டார்.
ஹமாஸ்-இன் நுக்பா படைப்பிரிவு தளபதி உயிரிழப்பு- இஸ்ரேல் பாதுகாப்பு படை
Published on

ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி அப்துல்-ஹாதி சபா கொல்லப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தி இருக்கிறது. சமீபத்திய டிரோன் தாக்குதலில் அப்துல் ஹாதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி கிபுட்ஸ் நிர் ஓஸ்-இல் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை அப்துல் ஹாதி சபா வழிநடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. நுக்பா படைப்பிரிவு தளபதி தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் வைத்து கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த எக்ஸ் தள பதிவில், "இஸ்ரேல் பாதுகாப்பு படையின் உளவுத்துறை மற்றும் ஐ.எஸ்.ஏ. தாக்குதலில் நுக்பா படைப்பிரிவு தளபதியான அப்துல் ஹாதி சபா கொல்லப்பட்டார்," என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட அப்துல் ஹாதி சபா இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை வழிநடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் பின்புலமாக இருந்த அனைத்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com