அவர் பேசிய விதம் எனக்கு பிடிக்கவில்லை.. சுவிட்சர்லாந்து மீது கூடுதல் வரி விதிக்க டிரம்ப் சொன்ன காரணம்

30 சதவீத வரி அறிவிப்புக்குப் பிறகு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அவர்கள் ஒரு சிறிய நாடு என்றும், வரிகளின் சுமையை அவர்கள் மீது சுமத்த வேண்டாம் என்றும் கூறினார்.
அவர் பேசிய விதம் எனக்கு பிடிக்கவில்லை.. சுவிட்சர்லாந்து மீது கூடுதல் வரி விதிக்க டிரம்ப் சொன்ன காரணம்
Published on

சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 39 சதவீதம் வரி விதித்துள்ளது.

இந்நிலையில் முதலில் 30 சதவீதமே வரி விதித்ததாகவும், ஆனால் கூடுதலாக 9 சதவீதம் வரிவிதிக்க ஒரு காரணம் உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு டிரம்ப் அளித்த பேட்டியில், சுவிட்சர்லாந்து மீதான 30 சதவீத வரி அறிவிப்புக்குப் பிறகு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அது முதலில் சுவிஸ் பிரதமர் என்று நினத்தேன். ஆனால் மறுப்புறம் போனில் பேசியது சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில் உறுப்பினர் கரின் கெல்லர்.

அவர் வரிகளைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர்கள் ஒரு சிறிய நாடு என்றும், வரிகளின் சுமையை அவர்கள் மீது சுமத்த வேண்டாம் என்றும் கூறினார்.

நீங்கள் ஒரு சிறிய நாடாக இருந்தாலும், எங்களுடன் வர்த்தகத்தில் உங்களுக்கு 42 பில்லியன் டாலர் உபரி உள்ளது நான் விளக்கினேன்.

இருப்பினும், 'நாங்கள் ஒரு சிறிய நாடு' என்று அவர் மீண்டும் மீண்டும் கூறினார். அவர் பேசிய விதம் எனக்கு பிடிக்கவில்லை, அதனால்தான் வரிகளை 30 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாக உயர்த்தினேன்" என்று கூறியுள்ளார்.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com