ஆஸ்திரேலியாவில் பரபரப்பு: 420 கிலோ காந்தி சிலையை திருடிச் சென்ற கும்பலுக்கு வலை

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் மகாத்மா காந்தியின் வெண்கல சிலை திருடு போனது.இந்தச் சிலையை 2021, நவம்பரில் முன்னாள் பிரதமர் ஸ்காட் மாரிசன் திறந்து வைத்தார்.
ஆஸ்திரேலியாவில் பரபரப்பு: 420 கிலோ காந்தி சிலையை திருடிச் சென்ற கும்பலுக்கு வலை
Published on

சிட்னி:

ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமுதாய கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு சுமார் 240 கிலோ எடையுள்ள மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை 2021-ம் ஆண்டு நவம்பரில் அப்போதைய பிரதமர் ஸ்காட் மாரிசன் திறந்து வைத்தார்.

இந்நிலையில், இந்திய சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்டு இருந்த வெண்கல சிலையை மர்ம கும்பல் ஒன்று திருடிச் சென்றுள்ளது.

கால்களைத் தவிர்த்து பிற உடல் பாகங்களுடன் காந்தியின் சிலையை திருடிச் சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் காந்தி சிலை திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com