ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்- இஸ்ரேல் விமான நிலையம் மூடல்

ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.டிரோன்களை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு நடு வானில் சுட்டு வீழ்த்தின.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்- இஸ்ரேல் விமான நிலையம் மூடல்
Published on

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏமனில் செயல்படும் ஹவுதி பயங்கரவாதிகள் குறிவைத்து டிரோன்கள் வீசி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் விமான நிலையம் சேதம் அடைந்துள்ளது.

இந்த டிரோன்களை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு நடு வானில் சுட்டு வீழ்த்தின. இருப்பினும், ஒரு டிரோன் விமான நிலையம் மீது விழுந்து வெடித்தது.

இந்த சம்பவத்தில் 63 வயதான நபர் காயமடைந்தார். இதையடுத்து, விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. இதனால், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com