வங்கதேசம்: தீ வைத்து எரிக்கப்பட்ட இந்து சிகிச்சை பலனின்றி பலி

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அங்கு வன்முறை தீவிரமடைந்தது.வங்கதேசத்தில் 15 நாளில் 4 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வங்கதேசம்: தீ வைத்து எரிக்கப்பட்ட இந்து சிகிச்சை பலனின்றி பலி
Published on

டாக்கா:

வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி மற்றும் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தஅம்ரித் மண்டல் (29), என்ற இந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆடை தொழிற்சாலை ஒன்றில் பிஜேந்திர பிஸ்வாஸ் (42) என்ற இந்து தொழிலாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இதற்கிடையே, ஷரியத்பூர் மாவட்டத்தில் மேலும் கோகோன் சந்திர தாஸ் ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டார். அவர் தெருவில் உருண்டு புரண்டபடி வலியில் அலறி துடித்தார். அருகில் இருந்த குளத்தில் அவர் குதித்தார். உடல்நிலை மோசமான காரணத்தால் டாக்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மூன்று நாள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சந்திர தாஸ் உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com