கிடுகிடுவென உயரும் தங்கம், வெள்ளி விலை.. அப்படியே நடக்கும் பாபா வாங்கா கணிப்பு - அடுத்து என்ன?

1911 முதல் 1996 வரை வாழ்ந்த பால்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்கா.ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு இந்த நிலைமை மேலும் கடினமானதாக மாறலாம்.
கிடுகிடுவென உயரும் தங்கம், வெள்ளி விலை..  அப்படியே நடக்கும் பாபா வாங்கா கணிப்பு - அடுத்து என்ன?
Published on

1911 முதல் 1996 வரை வாழ்ந்த பால்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் எதிர்காலம் குறித்த கருத்துக்கள் உலகபிரசித்தம்.

பாபா வாங்கா சொன்ன பல விஷயங்கள் நிஜமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில் பாபா வங்காவின் கணிப்புப்படி, எதிர்காலத்தில் ரொக்கப் பணத்தின் மதிப்பு உலகளவில் வீழ்ச்சியடையும்.

இதனால் பணப்புழக்கம் குறைந்து, மக்கள் பணத்தின் மீதான நம்பிக்கையை இழப்பார்கள். அதற்குப் பதிலாக தங்கம், வெள்ளி மற்றும் தாமிரம் போன்ற உலோகங்களில் முதலீடு செய்யத் தொடங்குவார்கள் என்று கூறியிருந்தார்.

தற்போது, 2026இல் சந்தை நிலவரம் பாபா வங்காவின் கணிப்பை உறுதிப்படுத்துவது போல, உலோகங்களின் விலை இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

இன்று தோராயமாக 24 கேரட் 10 கிராம் தங்கம் ரூ.1,59,100, வெள்ளி 1 கிலோ ரூ.2,44,929, ஒரு கிலோ தாமிரம் ரூ.1,242 க்கு விற்கப்பட்டது.

ரொக்கப் பணத்தின் வீழ்ச்சியும், தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துக்களின் விலை உயர்வும் பாபா வாங்கா கூறியது போலவே நடப்பதாக பலர் கருதுகின்றனர்.

ஆனால், நாடுகளுக்கு இடையே நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பசுமை எரிசக்தி துறையில் தங்கம், தாமிரத்தின் தேவை அதிகரிப்பு, உலகளாவிய பணவீக்கத்தின் விளைவாகவே விலை உயர்வு ஏற்படுகிறது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே 2026-ன் இறுதிக்குள் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்னும் பல மடங்கு உயரும் என்றும் அஞ்சப்படுகிறது. 

அதேநேரம், 2026இல், உலகப் பொருளாதாரம் சரிவடையும் அபாயம் உள்ளது. சர்வதேச சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதார மந்தநிலை ஏற்படும். ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் நாடுகளுக்கு இந்த நிலைமை மேலும் கடினமானதாக மாறலாம். இதன் உச்சமாக 2026-ல் உலக நாடுகளுக்கு இடையே ஒரு போர் நடக்கும் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com