எலான் மஸ்க்கிற்கு ஜெர்மனி அதிபர் கண்டனம்

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், ஜெர்மனியின் வலதுசாரி கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.ஜெர்மனியில் பேச்சு சுதந்திரம் உள்ளது.
எலான் மஸ்க்கிற்கு ஜெர்மனி அதிபர் கண்டனம்
Published on

ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ், உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஜெர்மனி அதிபராக இருப்பவர் ஓலாப் ஸ்கோல்ஸ். கடந்த 2021ல் நடந்த தேர்தலில் அவரது கூட்டணி ஆட்சி அமைந்தது. அவர் கொண்டு வந்த பொருளாதார சட்டங்களுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு தோல்வி அடைந்ததை அடுத்து பிப்ரவரியில் முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், ஜெர்மனியின் வலதுசாரி கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

ஜெர்மனி அதிபரை திறமையற்ற முட்டாள் என்றும், ஜனநாயகத்துக்கு எதிரான கொடுங்கோலன் என்றும் மஸ்க் கூறியிருந்தார்.

இது தொடர்பாக உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற பிறகு ஓலப் ஸ்கோலஸ் கூறியதாவது:-

ஜெர்மனியில் பேச்சு சுதந்திரம் உள்ளது. கோடீஸ்வரர் ஆக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் சரி, விரும்பியதை பேசலாம். ஆனால், தீவிர வலதுசாரிகளை ஆதரிப்பது என்றால், அதனை ஏற்க முடியாது என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com