friendly-fire incident... அமெரிக்க போர்விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்!

குவைத், பல அமெரிக்க விமானங்கள் விபத்துக்குள்ளானதை ஒப்புக்கொண்டுள்ளது.அமெரிக்க மத்திய கட்டளையும் விபத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
friendly-fire incident... அமெரிக்க போர்விமானங்களை சுட்டு வீழ்த்திய குவைத்!
Published on

ஈரான்மீது ஏவப்பட்ட மூன்று அமெரிக்க F15 போர் விமானங்களை குவைத் வான் பாதுகாப்புப் படையினர் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. விமானங்களில் இருந்த 6 விமான ஓட்டிகளும், பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழிக்கும் முயற்சியின் போது, இந்த விமானங்கள் தவறுதலாகத் தாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தை ஒரு விபத்து என குவைத் ஒப்புக்கொண்டுள்ளது. தொடர்ந்து இதுதொடர்பாக இருதரப்பும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஈரானுக்கும், இஸ்ரேல்-அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் இப்பகுதியில் வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com