குரில் தீவுகளில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

குரில் தீவின் கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது.
குரில் தீவுகளில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Published on

மாஸ்கோ:

ரஷியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே அமைந்துள்ளது குரில் தீவுகள். இந்த தீவின் கடல் பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குரில் தீவுகளில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com