Crude Oil Decline | சட்டென சரிந்த கச்சா எண்ணெய் விலை - டிரம்ப் அறிவிப்பால் நடந்த மாற்றம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும்போது ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும்.டிரம்ப்பின் அறிவிப்பை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்தது.
Crude Oil Decline | சட்டென சரிந்த கச்சா எண்ணெய் விலை - டிரம்ப் அறிவிப்பால் நடந்த மாற்றம்
Published on

அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாக நடக்கிறது. அங்கு போக்குவரத்து முடங்கியதால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 119.50 டாலராக அதிகரித்து பின்னர் 112.98 டாலருக்கு விற்றது.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும்போது ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும். கச்சா எண்ணெய் விலைகளைக் குறைப்பதற்காக எண்ணெய் சார்ந்த குறிப்பிட்ட சில தடைகளை நாங்கள் தளர்த்தி வருகிறோம். நிலைமை சீரடையும் வரை அந்தத் தடைகளை நாங்கள் நீக்கி வைப்போம். தேவைப்பட்டால் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்களை அமெரிக்கக் கடற்படையும் அதன் கூட்டாளி நாடுகளும் பாதுகாப்பாக வழிநடத்திச் செல்லும் என்று தெரிவித்தார்.

டிரம்ப்பின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்தது. சர்வதேச சந்தையில் இன்று காலை பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 90 அமெரிக்க டாலராக சரிந்தது. அதேபோல் மற்ற ரக கச்சா எண்ணெய் விலைகளும் கடும் சரிவை சந்தித்தன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com