பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் மன்னர்

பிரதமர் மோடி முதல் கட்டமாக நேற்று ஜோர்டான் நாட்டுக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் மன்னர்
Published on

அம்மான்:

பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன் வரவேற்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

அதன்பின், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன் உடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார்.

இந்நிலையில், ஜோர்டான் நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன் பிரதமர் நரேந்திர மோடியை காரில் அருட்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது காரை ஜோர்டான் மன்னர் ஓட்டிச் சென்றார்.

இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com