வெடிகுண்டு மிரட்டல்: ஏர் இந்தியா விமானம் தாய்லாந்தில் அவசர தரையிறக்கம்

தாய்லாந்தின் ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. விமானத்திலிருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
வெடிகுண்டு மிரட்டல்: ஏர் இந்தியா விமானம் தாய்லாந்தில் அவசர தரையிறக்கம்
Published on

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து ஏர் டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இன்று காலை 9.30 மணிக்கு தாய்லாந்தின் ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா ஏஏ 379 விமானம் 156 பயணிகளுடன் புறப்பட்டது.

இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசரமாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஃபூகெட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்திலிருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com