ஆஸ்திரேலியாவில் மே 3-ம் தேதி பொதுத்தேர்தல்: எதிர்க்கட்சிக்கு ஆதரவு அதிகரிப்பு

விலைவாசி உயர்வு, வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும். இந்த தேர்தல் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் மே 3-ம் தேதி பொதுத்தேர்தல்: எதிர்க்கட்சிக்கு ஆதரவு அதிகரிப்பு
Published on

சிட்னி:

ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 3-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியாவின் கவர்னர் சாம் மாஸ்டினை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேரில் சென்று சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும் என கூறப்படுகிறது. இந்தப் பொதுத்தேர்தல் ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022 தேர்தலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை ஆதரிக்காத 19 எம்.பி.க்கள் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு தேர்வாகினர். இந்த ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் அணிசேரா எம்.பி.க்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com