துருக்கி தீ விபத்து: பலி எண்ணிக்கை 66 ஆக அதிகரிப்பு

துருக்கியில் உள்ள ஓட்டலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.இதனால் ஓட்டல் முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.
துருக்கி தீ விபத்து: பலி எண்ணிக்கை 66 ஆக அதிகரிப்பு
Published on

அங்காரா:

துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில் சுமார் 12 மாடிகளைக் கொண்ட ஓட்டல் மற்றும் பனிச்சறுக்கு விடுதி அமைந்துள்ளது. தற்போது துருக்கியில் 2 வாரம் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், இந்த ஓட்டலில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 66 பேர் உயிரிழந்ததாகவும், 51 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் ஓட்டலில் சுமார் 238 பேர் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிக்க முயன்றதாகவும், அதில் சிலர் கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து சுமார் 170 கி.மீ. தொலைவில் இந்த ஓட்டல் அமைந்துள்ளது. தீ விபத்து குறித்து அறிந்து பல்வேறு மந்திரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தற்போது தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இதுதொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன் கூறுகையில், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com