நடுவானில் விமானம் குலுங்கியதால் அவசர தரையிறக்கம்:185 பேர் உயிர் தப்பினர்

ஜெர்மனியில் நடுவானில் சென்றபோது விமானம் குலுங்கியது.இதனால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நடுவானில் விமானம் குலுங்கியதால் அவசர தரையிறக்கம்:185 பேர் உயிர் தப்பினர்
Published on

பெர்லின்:

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து ரியானேர் என்ற விமானம் புறப்பட்டது. இத்தாலியின் மிலன் நகருக்குச் சென்ற அந்த விமானத்தில் 6 பணியாளர்கள் உள்பட 185 பேர் இருந்தனர்.

நடுவானில் சென்றபோது பலத்த புயல் காற்று வீசியது. அப்போது விமானம் பயங்கரமாக குலுங்கியதால் பயணிகள் இருக்கை மீது மோதினர்

இதனால் பீதியடைந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். இதனையடுத்து, விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது விமானத்தை உடனடியாக தரையிறக்க விமானிக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி பவேரியாவின் மெம்மிங்கன் விமான நிலையம் அருகே விமானம் வட்டமிட்டது. பின்னர் விமானியின் சாமர்த்தியத்தால் பத்திரமாக தரையிறங்கியது. இதனால் 185 பேரும் உயிர் தப்பினர்.

இந்தச் சம்பவத்தில் பணியாளர் உள்பட 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இதனையடுத்து பவேரியா விமான நிலையத்தில் இருந்து விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டது. எனவே பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com