டிரம்ப் அமைத்த காசா அமைதிக் குழுவில் இணைய 8 இஸ்லாமிய நாடுகள் சம்மதம்

காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.உலக பொருளாதார மாநாட்டில் அமைதிக் குழுவிற்கான வரைவை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
டிரம்ப் அமைத்த காசா அமைதிக் குழுவில் இணைய 8 இஸ்லாமிய நாடுகள் சம்மதம்
Published on

அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைய சவுதி அரேபியா முடிவெடுத்துள்ளது.

இதன்மூலம் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், துருக்கி, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய எட்டு இஸ்லாமிய நாடுகள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாகச் சேருகின்றன.

காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கம். காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் தாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் அமைதிக் குழுவிற்கான வரைவை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com