நியூயார்க்கில் சோகம்: ஹட்சன் நதியில் ஹெலிகாப்டர் விழுந்து 6 பேர் பலி

அமெரிக்காவில் நியூயார்க் நகரின் ஹட்சன் நதியில் ஹெலிகாப்டர் விழுந்தது.இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 6 பேரும் பரிதாபமாக பலியாகினர்.
நியூயார்க்கில் சோகம்: ஹட்சன் நதியில் ஹெலிகாப்டர் விழுந்து 6 பேர் பலி
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்றது. நியூயார்க் நகரத்தின் ஹட்சன் நதியில் மேலே செல்லும்போது நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.

லோயர் மன்ஹாட்டனின் ட்ரைபெக்கா பகுதியை நியூஜெர்சி சிட்டியுடன் இணைக்கும் ஹாலண்ட் சுரங்கப்பாதை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தகவலறிந்து நியூயார்க் தீயணைப்புத் துறை அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை தொடங்கினர்.

இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com