வங்கதேசத்தில் 25 வயது மாற்றுத்திறனாளி இந்து பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் பலவந்தமாகக் கடத்தி சென்றது.ரகீப், சோஹைல் மற்றும் ரசல் ஆகிய மூன்று இளைஞர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
வங்கதேசத்தில் 25 வயது மாற்றுத்திறனாளி இந்து பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்
Published on

ஆட்சி மாறினாலும் வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து வருகிறது.

சாந்த்பூர் மாவட்டத்தில் 25 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி இந்துப் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 9 மணியளவில், வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் பலவந்தமாகக் கடத்திச் சென்றது.

ஆள் நடமாட்டமற்ற பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண், மூன்று பேரால் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும் அவரை கடுமையாக தாக்கியும் அவர்கள் துன்புறுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

 சுயநினைவின்றி அப்பகுதியில் கிடந்த அவரை மீட்ட உள்ளூர் மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, ரகீப், சோஹைல் மற்றும் ரசல் ஆகிய மூன்று இளைஞர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இருப்பினும் அவர்களை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை என்று தெரிகிறது.

காவல்துறையின் இந்த மெத்தனப்போக்கைக் கண்டித்து உள்ளூர் மக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வங்கதேசத்தில் அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி வெற்றி பெற்ற நிலையில் அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் கடந்த வாரம் அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com