பாகிஸ்தானில் சோகம்: பயணிகள் பேருந்து-லாரி மோதலில் 13 பேர் உயிரிழப்பு

பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தும், எண்ணெய் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. மோசமான சாலைகள், போக்குவரத்து விதிமீறலால் அதிகளவில் விபத்துகள் நடக்கின்றன.
பாகிஸ்தானில் சோகம்: பயணிகள் பேருந்து-லாரி மோதலில் 13 பேர் உயிரிழப்பு
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கராச்சி அருகே M9 நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும், எண்ணெய் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பாகிஸ்தானில் கிராமப்புறங்களில் உள்ள மோசமான சாலைகள், தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், பனிமூட்டம் மற்றும் போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட காரணங்களால் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com