தென் ஆப்பிரிக்கா: பாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவில் மதுபான பாரில் துப்பாக்கிச் சூடு நடந்தது.இதில் 3 குழந்தைகள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென் ஆப்பிரிக்கா: பாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி
Published on

கேப் டவுன்:

தென் ஆப்பிரிக்கா தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள மதுபான பாரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 2 சிறுவர்கள், ஒரு சிறுமி உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com