சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள்.. வரும் தேர்தலில் இனி என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்- சீமான்

நேர்மைக்கும் உண்மைக்கும்தான் இங்கு பஞ்சம். அதனால், நான் தனித்து நிற்கின்றேன்.நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் அல்ல.
சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள்.. வரும் தேர்தலில் இனி என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்- சீமான்
Published on

கடலூர் மாவட்ட மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த சீமான்" சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள்.. வரும் தேர்தலில் இனி என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்போது பூமியை சொர்க்கமாய் மாற்றுவேன். சிவன் ஆட்டத்தைப் பார்த்திருப்பீர்கள். சீமான் ஆட்டத்தை இனி பார்ப்பீர்கள்.

நேர்மைக்கும் உண்மைக்கும்தான் இங்கு பஞ்சம். அதனால், நான் தனித்து நிற்கின்றேன். தேர்தலில் ஏற்படும் தற்காலிக தோல்விக்காக நிரந்த வெற்றியை விடமாட்டோம். நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் அல்ல.

பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு அழைத்தால் செல்வேன். மேடையில் ஏறி பேசுவேன் நான் அங்கிருந்து வந்தவன் தான். அதனால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com