ஆட்சி முடியும் நேரத்தில் எதற்கு அடிக்கல் ?- தி.மு.க அரசை விளாசிய விஜய்

தமிழகம் தண்ணீர் இல்லாமல் திவால் ஆகும் என ஐநா கூறியுள்ளது. மணல் மாஃபியா கும்பலுக்கு ஆதரவு கொடுப்பது திமுக தான் என்பதை மறுக்க முடியுமா?
ஆட்சி முடியும் நேரத்தில் எதற்கு அடிக்கல் ?- தி.மு.க அரசை விளாசிய விஜய்
Published on

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்துக்கு கழுத்தில் பச்சை துண்டு எண்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார்.

தவெக தலைவர் விஜய் உரையை தொடங்கிய உடன் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக முழுக்கமிட்டனர்.

அப்போது அவர் பேசியதாவது:-

நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு உறுதிமொழியை கொடுக்க வேண்டும்.

ஊழலற்ற தவெக அமைப்பீர்களா?

விஜய்க்கு ஒரு வாய்ப்பு தருவீர்கள் தானே?

ஒவ்வொரு பூத்திலும் விசில் சத்தம் கேட்கும்தானே.

விசில் சத்தம் ஓட்டாக மாறும் தானே.

இந்த பூமியையும், மனிதர்களையும் படைத்தது கடவுளாக இருக்கலாம். அந்த கடவுளுக்கே படையல் போடுபவர்கள் நம் விவசாயிகள், இந்த பூமியை சாமியாக்குபவர்கள் விவசாயிகள் தான்.

அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் ஒரு விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

நான் விவசாயி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றாலும் அவர்கள் படும் கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும்.

தவெக ஆட்சி அமைந்தவுடன் தீர்க்க வேண்டிய முக்கிய பிரச்சனைகளில் விவசாயிகளின் பிரச்சனையும் ஒன்று.

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தை கையில் எடுத்துதான் தவெக அரசியல் போராட்டத்தை தொடங்கியது.

தமிழகம் தண்ணீர் இல்லாமல் திவால் ஆகும் என ஐநா கூறியுள்ளது. மண், கல் என அனைத்தையும் கொள்ளையடித்தால் என்ன நடக்கும்?

மணல் மாஃபியா கும்பலுக்கு ஆதரவு கொடுப்பது திமுக தான் என்பதை மறுக்க முடியுமா?

கடன் வாங்கி தலைக்குப்புற கிடக்கும் திமுக அரசிடம் சொல்வதும் ஒன்று தான்.

ஆட்சி முடியும் நேரத்தில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது ஏன்?

மீனவர்கள் விவகாரத்தில் மானே, தேனே பொன்மானே என கடிதம் எழுதாமல் உணர்வுப்பூர்மான நடவடிக்கை தேவை.

மீனவரகளே கவலை வேண்டாம். அடுத்து தவெக ஆட்சி அமைந்தவுடன் மீனவர்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நம் மீனவர்கள் மீது யாரும் கை வைக்க முடியாத என்ற அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com