புதுச்சேரியிலும் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு

விரைவில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல்முறையாக தவெக தேர்தலை சந்திக்கிறது.
புதுச்சேரியிலும் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு
Published on

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

விஜய்யின் ரசிகர்களுக்காகவும், மக்கள் மத்தியில் எளிதில் சென்றடையும் என்பதாலும், 'விசில்' சின்னம் தவெகவின் முதன்மைத் தேர்வாக அமைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதுச்சேரியிலும் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com