ஒரே கொள்கைதான்- ஆதவ் அர்ஜூனா; புதிய அணுகுமுறை- திருமாவளவன்

ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா இன்று சந்தித்தார்.
ஒரே கொள்கைதான்- ஆதவ் அர்ஜூனா; புதிய அணுகுமுறை- திருமாவளவன்
Published on

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதைதொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா இன்று சந்தித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு முதல் முறையாக திருமாவளவனை ஆதவ் அர்ஜூனா சந்தித்தார்.

தவெகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா மரியாதை நிமித்தமாக திருமாவளவனை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியானது.

இந்நிலையில், திருமாவளவன் - ஆதவ் அர்ஜூனா சந்திப்பு பிறகு இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது ஆதவ் அர்ஜூனா கூறுகையில், " தவெக கட்சி தலைவரும் சரி, அண்ணன் திருமாவளவனும் சரி ஒரே கருத்து, ஒரே கொள்கையில்தான் இருக்கிறோம். அதனால், நாங்கள் எதிர்துருவம் அல்ல. ஒரே துருவத்தில் கொள்கை அடிப்படையில் பயணம் எப்போதுமே இருக்கும். கொள்கை அடிப்படையில் நாங்கள் ஒற்றுமையாகதான் இருக்கிறோம்.

அவருடைய அறிவுரைகளை எடுத்துக்கொண்டு அதை செயல்களில் காட்டுவோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், " தமிழக அரசியலில் ஒரு புதிய அணுகுமுறையை தொடங்கி வைத்திருக்கிறார். பொதுவாக ஒரு கட்சியில் இருந்து விலகினாலோ அல்லது விலக்கி வைத்தாலோ அதை ஒரு பகையாக கருதுகின்ற ஒரு பாரம்பரியம் தான் அரசியல் களக்கில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

ஆனால், ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறக் கூடிய ஒரு சூழல் இருந்த நிலையிலும்கூட, அதை ஒரு பகையாக கருதவில்லை.

வலிகள் இருந்தாலும் கூட அதை எதிராக நிறுத்தவில்லை. தான் இன்னொரு கட்சியில் போய் சேர்ந்து, பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்று செயல்படுகிற இந்த சூழலில் உங்களுடைய வாழ்த்தும் எங்களுக்கு தேவை என்று என்னை தேடி ஆதவ் வந்திருக்கிறார் என்பது தமிழக அரசியல் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நாகரிகமாக நான் பார்க்கிறேன்.

கருத்தியல் ரீதியாக எவ்வளவு முரண்கள் இருந்தாலும் களத்தில் நாம் எதிர் எதிர் துருவத்தில் நின்று செயல்படக்கூடிய நிலையில் இருந்தாலும்கூட இத்தகைய நட்புறவை பேணுவது ஒரு நாகரிகமாக அணுகுமுறை.

அந்த வகையில் ஆதவ் அர்ஜூனாவுக்கு வாழ்த்துகள்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com