வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

21-ந்தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 245, கோயம்பேட்டில் இருந்து 51, மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.22-ந்தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 240, கோயம்பேட்டில் இருந்து 51, மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கம்.
வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Published on

வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து பிப்ரவரி 21-ஆம் தேதி (நாளை-வெள்ளிக்கிழமை) மற்றும் பிப்ரவரி 22-ஆம் தேதி (நாளை மறுதினம்- சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கிளாம்பாக்கத்தில் இருந்து 245 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 51 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

பிப்ரவரி 22-ந்தேதி சனிக்கிழமை கிளாம்பாக்கத்தில் இருந்து 240 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 51 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com