அடுத்த மாதம் தஞ்சை செல்கிறார் விஜய்- மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

அடுத்த மாதம் 2-வது வாரத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு அல்லது நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணிகளில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அடுத்த மாதம் தஞ்சை செல்கிறார் விஜய்- மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
Published on

தஞ்சாவூர்:

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை திருச்சியில் தொடங்கி அரியலூர், காஞ்சீபுரம், நாகை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடத்தினார். கரூர் சம்பவத்துக்கு பின்னர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை.

அதன் பின்னர் ஈரோட்டில் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டம் மற்றும் வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி போன்றவை நடத்தப்பட்டன.

இந்த நிலையில் இதர மாவட்டங்களிலும் விஜய் மக்கள் சந்திப்பு இயக்கம் அல்லது நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் அல்லது பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 2-வது வாரத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு அல்லது நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணிகளில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இடத்தை தேர்வு செய்த பின்னர் போலீசாரிடமும் முறையாக அனுமதி கேட்டு விண்ணப்பிக்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com