#Vijay | "Hurt ஆகாதீர்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்!" சொந்த பிரச்சினை குறித்து மனம் திறந்த விஜய்..!

சொந்த பிரச்சினை குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசினார்.
#Vijay | "Hurt ஆகாதீர்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்!" சொந்த பிரச்சினை குறித்து மனம் திறந்த விஜய்..!
Published on

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த கொண்டாட விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் அக்கட்சி பெண் நிர்வாகிகள் மற்றும் பல துறைகளில் சாதனை படைத்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் பெண்கள் முன்னேற்றத்தை முன்னிறுத்தி தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். தொடர்ந்து குட்டிக் கதை சொன்ன விஜய், உரையின் இறுதியில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசினார்.

அப்போது அவர், "சமீபத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு நீங்கள் போராடி, ஹர்ட் (hurt) ஆவதை நான் பார்க்கிறேன். அதை பார்த்து எனக்கு ஹர்ட் ஆகிறது. அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்களும், நானும் மக்களின் பிரச்சினைகளை மட்டும் பார்ப்போம், சரியா. ஹர்ட் ஆகாதீர்கள், வருத்தமெல்லாம் கிடையாது," என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com