மோசடி ஆட்சியிலேயே முக்கியமான ஆட்சி இந்த தி.மு.க. ஆட்சி - விஜய் ஆவேசம்!

முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. முன்மாதிரி ஆட்சி என்று சொல்வார்கள்.
மோசடி ஆட்சியிலேயே முக்கியமான ஆட்சி இந்த தி.மு.க. ஆட்சி - விஜய் ஆவேசம்!
Published on

த.வெ.க. தலைவர் விஜய் தஞ்சையில் இன்று த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நோக்கி பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.

இது குறித்து பேசும் போது, "கியாஸ் சிலிண்டருக்கு மானியமாக ரூ. 100 கொடுப்பதாக சொன்னது என்ன ஆனது? கரும்புக்கு ஆதார விலையாக ரூ. 4000 கொடுப்பதாக சொன்னீர்களே, என்ன ஆனது? நீண்ட நாள் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை கொடுப்பதாக சொன்னீர்களே, என்ன ஆனது? இதெல்லாம் வெறும் சாம்பிள் தான். முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது.

மாநில அரசால் நிச்சயம் முடியாது என்று தெரிந்த பிறகும், நாங்கள் வந்தால் நீட்டை ஒழிப்போம் என்றீர்கள். எவ்வளவு பெரிய மோசடி இது? கேட்டால், நாங்கள் தான் முன்மாதிரி ஆட்சி என்று சொல்வார்கள். மோசடி ஆட்சி. மோசமானவர்களிலேயே முக்கியமானவர்களை கேள்விப்பட்டுள்ளீர்களா? அந்த மாதிரி மோசடி ஆட்சியிலேயே முக்கியமான ஆட்சி இந்த தி.மு.க. ஆட்சி," என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com