நம்பிக்கையோடு இருங்கள்! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்! - விஜய்

நான் மாநில வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. உங்களுக்காக சட்டத்திற்கு உட்பட்ட எல்லா வழிகளிலும் நானும், த.வெ.க.வினரும் உறுதுணையாக இருப்போம்.
நம்பிக்கையோடு இருங்கள்! நல்லதே நடக்கும்! வெற்றி நிச்சயம்! - விஜய்
Published on

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியதாவது:

* பரந்தூர் கிராமத்திலிருந்து தனது கள அரசியல் பயணத்தை தொடங்குகிறேன்.

* வீட்டிற்கு பெரியவர்களை போல் நாட்டிற்கு மிக முக்கியமானவர்கள் விவசாயிகள்.

* நான் மாநில வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. வேறு இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும்.

* உங்களுக்காக சட்டத்திற்கு உட்பட்ட எல்லா வழிகளிலும் நானும், த.வெ.க.வினரும் உறுதுணையாக இருப்போம்.

* வளர்ச்சி என்ற பெயரில் ஏற்படும் அழிவு மக்களை அதிகம் பாதிக்கும். பரந்தூர் விமான நிலையத்துக்கான இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

* Confident ஆக இருங்கள், வெற்றி நிச்சயம் என்று அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com