த.வெ.க. ஆட்சிக்கு வந்தால்… தேர்தல் வாக்குறுதிகளை அடுக்கிய விஜய்

போதைப்பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.தொழிற்சாலைகள் அமைக்கவும், தொழில் வளம் பெருக்கவும் தனி கவனம் செலுத்தப்படும்.
த.வெ.க. ஆட்சிக்கு வந்தால்… தேர்தல் வாக்குறுதிகளை அடுக்கிய விஜய்
Published on

த.வெ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசியதாவது:-

* இப்பவும் சொல்றேன், உறுதியாக சொல்றேன், சாத்தியமா சொல்றேன், பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நம்முடைய ஆட்சியில் நம்பர் ஒன்னாக இருக்கும்.

* சட்டம் ஒழுங்கு ரொம்ப ரொம்ப கண்டிப்பா இருக்கும்.

* அரசு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளும் முதல் தரமா இருக்கும்.

* போட்டித்தேர்வுகளுக்குன்னு லட்சங்களை கொட்டி தனியா படிக்கணும்னு அவசியம் இருக்காது. ஏன்னா அரசு பள்ளி, கல்லூரி சிலபஸ்கள் போட்டித் தேர்வுகளை எளிமையா சந்திக்கிற மாதிரி மாற்றி அமைக்கப்படும்.

* உயர்நிலை பாடத்திட்டங்களிலேயே அடிப்படை அரசியல், சாசன சட்டம் சேர்க்கப்படும். மாநில மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள், வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் அவற்றை அணுகும் முறை குறித்து மாணவர்களுக்கு செயல்முறை பாடமாக கற்பிக்கப்படும்.

* அனைத்து அரசு பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கு சுத்தமான சுகாதாரமான மற்றும் கதவுகள் பொருத்தப்பட்ட Rest Roomகள் அமைப்பது உறுதி செய்யப்படும்.

* போதைப்பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்..

* மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிக்களில் சரிபாதி பெண்களாக இருக்கும்படி செய்வோம்.

* மலை கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பிரசவம் பார்க்கும் வசதியுடன அமைக்கப்படும்.

* பஸ் போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.

* ஏற்கனவே அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பு இருந்தாலும் ஆட்டோ, டாக்சி மற்றும் லாரி டிரைவர்களுக்கென அவர்களின் நலனுக்காகவும், குடும்ப நலனுக்காகவும் தனியாக நல வாரியம் அமைக்கப்படும்.

*தென்தமிழகம் உட்பட தமிழகத்தின் தேவையான பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கவும், தொழில் வளம் பெருக்கவும் தனி கவனம் செலுத்தப்படும்.

* விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நெசவாளர்களின் கருத்துகளை அறிந்து அவர்களுக்கான திட்டங்கள் காலத்திற்கு ஏற்ப உருவாக்கப்படும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com